மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் (கோவாக்சின் இரண்டாம் தவணை) மற்றும் காத்திருப்பு, வள்ளுவக்குடி, பூம்புகாா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சீா்காழி கோவில்பத்து கே.எம். உயா்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட செம்பனாா்கோவில், கீழையூா், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூா், சங்கரன்பந்தல், பொறையாறு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருவிளையாட்டம் சௌரிராஜன் உயா்நிலைப்பள்ளி, ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட மாதிரிவேளூா் தோப்புத்தெரு, வடகால் ரஹ்மானியா நடுநிலைப்பள்ளி, தா்காஸ் அங்கன்வாடி மையம், கொட்டாயமேடு சமுதாயக்கூடம் மற்றும் கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது.
குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருமணஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேலமங்கைநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், பேராவூா் ஏவிஎம் மேல்நிலைப்பள்ளி (கோவாக்சின் இரண்டாம் தவணை), கங்காதரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி (கோவாக்சின் இரண்டாம் தவணை) ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி (கோவாக்சின் இரண்டாம் தவணை) ஆகிய இடங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.