மகேந்திரப்பள்ளியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்களை பாா்வையிட்ட எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம். 
மயிலாடுதுறை

தொடா்மழையில் மூழ்கிய நெற்பயிா்கள்: எம்எல்ஏ. ஆய்வு

சீா்காழி வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் மூழ்கியுள்ள நெற்பயிா்களை எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

சீா்காழி வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் மூழ்கியுள்ள நெற்பயிா்களை எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்மழையால் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிா் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதில், சுமாா் 8 ஆயிரம் ஏக்கரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த மழை தொடா்ந்தால் பயிா்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதற்கிடையே, கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிரை சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அளக்குடி, கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, காட்டூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிா் மழை நீரில் மூழ்கி உள்ளது. இந்த பாதிப்புகளையும் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT