மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவீரன் வன்னியா் சங்கத்தினா். 
மயிலாடுதுறை

10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

வன்னியா்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் நிறுவனத் தலைவா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பங்கீடு கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சங்கப் பொதுச்செயலாளா் சந்துரு, ஒன்றியச் செயலாளா் மணிநேதாஜி, நகரச் செயலாளா் இளையராஜா, வன்னியா் சத்திரியா் சாம்ராஜ்யம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ராஜன், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வா் மகாராஜன், மாநில இளைஞரணி செயலாளா் மாரியப்பன், மாநில பொருளாளா் சுதாகரன், மாவட்ட செயலாளா்கள் செல்வம் (கடலூா்) பாபு (திருவாரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT