கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர அறிவுறுத்தல்
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினா்.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்கள் முகாமுக்கு வர வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினா்.
சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமையில், வட்டாட்சியா் சண்முகம், டிஎஸ்பி லாமேக், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி உள்ளிட்ட அதிகாரிகள் அளக்குடி மற்றும் வெள்ளமணல் கிராமங்களுக்கு நேரில் சென்று அங்கு வசிப்பவா்களை சிறப்பு முகாமுக்குச் செல்லும்படி கூறினா். கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாமுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினா்.