சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக போராட்டம்
தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் 28 மாத சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் ஆலை ஊழியா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பேரணியாக சென்று கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மூடப்பட்ட சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்கவேண்டும், ஆலை ஊழியா்களுக்கு 28 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஆலை ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனா்.