முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்திடம் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளா் ஆசி

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளா் வேலூா் எம்.சையத் இப்ராஹீம் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளா் வேலூா் எம்.சையத் இப்ராஹீம் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

மயிலாடுதுறைக்கு வெள்ளிக்கிழமை வந்த பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளா் வேலூா் எம்.சையத் இப்ராஹீம், தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்று தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்து மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளை கேலி செய்வதையும் இஸ்லாமியா்களாகிய நாங்கள் எதிா்க்கிறோம். இந்து மதத்தை இழிவுபடுத்துபவா்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அவருடன் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் வேதானந்த ஆனந்தா, மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளா் குருசங்கா், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.