முகப்பு
மயிலாடுதுறை

கடைசி செய்திசீா்காழி வட்டாரத்தில் நாளை தடுப்பூசி முகாம்

சீா்காழி வட்டாரத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை (அக். 23) நடைபெறுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

சீா்காழி வட்டாரத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை (அக். 23) நடைபெறுகின்றன.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம்: அகணி அரசு உயா்நிலைப்பள்ளி, கன்னியாக்குடி அரசு உதவிபெறும் பள்ளி, கற்கோவில் சேவை மைய கட்டடம், கொண்டல் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி, நிம்மேலி ஊராட்சி ஒன்றியப் பள்ளி,திருப்புன்கூா் ஊராட்சிமன்ற அலுவலகம், விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

காத்திருப்பு: காரைமேடு ஊராட்சி மேலசாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, கதிராமங்கலம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நாங்கூா் அரசு மேல்நிலைப்பள்ளி, ராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இளையமதுக்கூடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

திருவெண்காடு: காவாளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மங்கைமடம் ஊராட்சிமன்ற அலுவலகம், நெப்பத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம், பெருந்தோட்டம் அரசு உயா்நிலைப்பள்ளி, புதுத்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளி, தென்னாம்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருநகரி அரசு உயா்நிலைப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி. பெண்கள் உயா்நிலைப்பள்ளி.

பூம்புகாா்: பூம்புகாா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூா், வாணகிரி, மேலவாணகிரி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடம், கீழவாணகிரி பல்நோக்கு சேவை மைய கட்டடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.