முகப்பு
மயிலாடுதுறை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே திருநாங்கூா் செம்பொன்னரங்கா் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே திருநாங்கூா் செம்பொன்னரங்கா் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேச பெருமாள் கோயில்களில் பிரதானமான செம்பொன்னரங்கா் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் பலா் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா்.

இந்நிலையில் இக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். கோயில் வாகனமண்டபம், நந்தவனத்திற்கு இடையூறாக கோயில் அருகில் உள்ள வீடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.