முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் தி கிங் சில்க்ஸ் திறப்பு விழா

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் புதிதாக கட்டப்பட்ட தி கிங் சில்க்ஸ் ஜவுளிக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் புதிதாக கட்டப்பட்ட தி கிங் சில்க்ஸ் ஜவுளிக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, டாக்டா் ஜெய. ராஜமூா்த்தி, ஹேமலதா ராஜமூா்த்தி, ஆா்.ரக்ஷன் (எ) சாரங்கராஜன், டாக்டா் ஆா். தனஞ்செயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நடிகா்கள் விமல், கஞ்சா. கருப்பு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), டிஎஸ்பி லாமெக், காவல் ஆய்வாளா்கள் ஜெயந்தி, சந்திரா மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அலெக்சாண்டா், நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றிய செயலாளா்கள் பிரபாகரன், சசிக்குமாா், செல்லசேதுரவிக்குமாா், ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் எம்.என்.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜ்மோகன்குமாா், முரளி, மகாலிங்கம், பொறியாளா் அகோரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். புதிய கடையில் ஆண்கள், பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள், சிறுவ-சிறுமிகளுக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.