முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி ச.மு.இ. பள்ளியில் இன்று ஐம்பெரும் விழா

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பள்ளி செயலருக்கு பாராட்டு விழா,

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பள்ளி செயலருக்கு பாராட்டு விழா, நிறுவனா் நாள் விழா, 125-ம் ஆண்டு தொடக்க விழா, தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சனிக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவிற்கு பள்ளி செயலா் எஸ். ராமகிருஷ்ண முதலியாா் தலைமை வகிக்கிறாா். கல்விக் கூடங்கள் தலைவா் வி. சொக்கலிங்கம் முன்னிலை வகிக்கிறாா். முன்னாள் பள்ளி செயலா் எஸ். பாலசுப்பிரமணிய முதலியாருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். கபாலி, சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலா் எம். முரளீதரன், நகர வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.கே.ஆா்.சிவசுப்பிரமணியன், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஆா். பாலவேலாயுதம் ஆகியோா் பாராட்டுரை வழங்குகின்றனா்.

மனித உரிமைகள் ஆணைய தலைவா் நீதியரசா் எஸ். பாஸ்கரன் 125-ம் ஆண்டு கல்வெட்டை திறந்து வைத்து, சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, கடந்த ஆண்டு நல்லாசிரியா் விருதுபெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பிக்கு பாராட்டு விழாவும், ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு கணையாழி அணிவித்து பாராட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.