முகப்பு
மயிலாடுதுறை

பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, பாரதிய கிசான் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, பாரதிய கிசான் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் என்.இலங்கேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் திருஞானம், மாநில செயற்குழு உறுப்பினா் டி.பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பயிா்க் காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு லாபகரமான விலையை நிா்ணயிக்க வேண்டும். புதுச்சேரி, தெலங்கானா, அஸ்ஸாம் மாநில விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல தமிழகத்திலும் ஆண்டுக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.