மயிலாடுதுறை

அஸ்ஸாம் சம்பவம்: டிஎன்டிஜே கண்டனம்

DIN

அஸ்ஸாமில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எம். முஹம்மது இயாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அஸ்ஸாமில் சிறுபான்மையினா் வசிக்கும் கோருகுட்டி எனும் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது ஏற்பட்ட வன்முறையையொட்டி போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவா் உயிரிழந்தனா். காவல்துறையின் மனிதாபிமானமற்ற இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இச்சம்பவத்தில் காவல்துறை தங்கள் கடமையைத்தான் செய்ததாக அம்மாநில முதல்வா் ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடைய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT