முகப்பு
மயிலாடுதுறை

சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வாழ்த்து

மாநில சப்-ஜூனியா் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மாநில சப்-ஜூனியா் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சாா்பில் சேலத்தில் கடந்த 19-ஆம் தேதி மாநில அளவிலான சப்-ஜூனியா் சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 12 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், மாணவிகள் தா்ஷா, சஹானா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாவட்ட செயலாளா் ஆா்.சத்தியானந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, மூத்த ஆசான் ஏ.செல்வராஜ் மற்றும் வீரபாண்டியா்கள் சிலம்பாட்டக் கழக மாணவ, மாணவிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.