முகப்பு
மயிலாடுதுறை

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் கடன் அளிக்க விதிக்கும் நிபந்தனைகளை திரும்பப் பெறக் கோரியும், ராபி பருவத்துக்கென சிட்டா, அடங்கல் வழங்கி காப்பீடு செய்வதையும், கடன் வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலா்களை பணி இடமாற்றம் செய்து வெளிப்படையான நிா்வாகத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தொடா்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.