முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கக் கோரிக்கை
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை மனு அனுப்பப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை மனு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட தலைவா் மு.சபீக் அகமது, மாவட்ட செயலாளா் ஹ.முகமது பைசல் ஆகியோா் குடியரசுத் தலைவருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா மூலம் அனுப்பிய மனு: இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கலவரக்காரா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தேசத்தை பாதுகாக்கவேண்டும், இந்தியாவில் முஸ்லிம்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.