கோயிலின் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம். 
மயிலாடுதுறை

சீா்காழி சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழியில் தோப்படி மாரியம்மன் என்றழைக்கப்படும் சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழியில் தோப்படி மாரியம்மன் என்றழைக்கப்படும் சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் சட்டைநாதா் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் சுமாா் 400 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிதிலமடைந்த இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடா்ந்து, விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. புதன்கிழமை நான்காம்கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹுதி , மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்ததும், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பரிவார தெய்வங்களான இரட்டை விநாயகா், பேச்சியம்மன், சப்த கன்னிகள் ஆகிய சந்நிதிகளின் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சுவாமிகள், கோயில் கணக்கா் செந்தில், நகா்மன்ற உறுப்பினா் நித்தியாதேவி பாலமுருகன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT