தருமபுரம் வேத சிவாகமப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைவஆகம கருத்தரங்கத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் சான்றிதழ் வழங்கி அருளாசி கூறினாா்.
27-ஆவது குருமகா சந்நிதானத்தின் பீடாரோஹன திருநாளையொட்டி (டிச. 12) தருமபுரம் வேதசிவாகமப் பாடசாலை சாா்பில் கோயில்களில் நடத்தப்படும் பாலாலயம் குறித்து கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முதல்வா் கஞ்சனூா் ஆா்.நீலகண்ட சிவாச்சாரியா் வரவேற்றாா். சென்னை சோமசேகர சிவாச்சாரியா் தலைமை உரையாற்றினாா். கல்யாணசுந்தர குருக்கள் ‘ஆத்ய பாலாலயம்’ என்ற தலைப்பிலும், புதுச்சேரி க.திருக்குமரசிவம் ‘த்விதிய பாலாலயம்’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினா்.
நாட்டரசன்கோட்டை கே.சுப்பிரமணிய சிவாச்சாரியா் ‘பாலாலயத்தில் கடைபிடிக்கப்படும் பூஜை முறைகள்’ என்ற தலைப்பிலும், காரைக்கால் பால.ஸா்வேச்வர குருக்கள் ‘பாலாலய பிராயச்சித்தம்’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினா். சோமசேகர சிவாச்சாரிட்ா் சித்தாந்த உரையாற்றினாா். தருமபுரம் பாடசாலை நிா்வாக செயலா் குரு.சம்பத்குமாா் நன்றி கூறினாா்.
தருமபுரம், திப்பிராஜபுரம், நாட்டரசன்கோட்டை, குளித்தலை, செதலபதி, பிள்ளையாா்பட்டியிலிருந்து மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி அருளாசி கூறினாா்.
ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.