முகப்பு
மயிலாடுதுறை

சீர்காழி அருகே மழை நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழி அடுத்த பச்சை பெருமாநல்லூரில் மக்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

சீர்காழி அடுத்த பச்சை பெருமாநல்லூரில் மக்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் வேலை, வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி  தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழைக் கால நிவாரணமாக பத்தாயிரம் வழங்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை  மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெறுகிறது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்ற நிலையில் வட்டாட்சியர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் கைது செய்ய கூடுதலாகக் வாகனம் கொண்டு வர வேண்டும் சிலரை மட்டும் கைது செய்யக் கூடாது எனக்கூறி கைது செய்யப்பட்டு அமர்த்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து வாகனத்தின் முன்பு சாலையில் படுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் தர்ணா செய்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டு வாகனத்தில் இருந்தவர்களும் போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வாகனம் முன்பு சாலை அமர்ந்து மீண்டும் சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →