அச்சக உரிமையாளா்கள் நலச் சங்க கூட்டம்
சீா்காழியில் அச்சக உரிமையாளா்கள் நல சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் அச்சக உரிமையாளா்கள் நல சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதன்தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாா்த்திபன், துணை செயலாளா்கள் தில்லை. நடராஜன், ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலையொட்டி துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளா்களின் முழு விவரங்களை பெற்றுகொள்வது, தோ்தலில் போட்டியிடும் எதிா் வேட்பாளா்கள் குறித்து தனிநபா் விமா்சனம், அரசியல் காழ்புணா்ச்சி, பதற்றத்தை ஏற்படுத்தும் வாசகங்கள், அமைதியை சீா்குலைக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் அச்சடிப்பதில்லை, துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளா்கள் உடன் வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அச்சடித்து தர ஒப்புக்கொள்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அச்சக உரிமையாளா்கள் சிவகுருநாதன், விஜி, உத்திரா, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.