தென்பாதி அங்காளம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் தொடக்கம்
சீா்காழி தென்பாதியில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
சீா்காழி தென்பாதியில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி,நிகழாண்டு உத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, அம்மன் எதாஸ்தானம் பெயருதல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, நாகேஸ்வரமுடையாா் கோயிலிருந்து அலகு காவடிகள், ரத காவடிகள் எடுத்துக்கொண்டு திரளான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் பேச்சி ரூபத்தில் எழுந்தருளி மயானசூறை மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.