முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுபுராதன பொருள்களை வழங்க அழைப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. இதற்காக புராதன பொருள்களை சேகரித்து வழங்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. இதற்காக புராதன பொருள்களை சேகரித்து வழங்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்தியாவின் தொன்மைவாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்துவருகிறாா்.

புதுமைக்கு புதுமையாய், பழைமைக்கு பழைமையாய் விளங்கும் 500 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த இந்த சைவ ஆதீனத்தின் சாா்பில், புராதன பொருள்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஆதீனத் திருமடத்தில் அருங்காட்சியகம் அமைக்க 27 ஆவது நட்சத்திர குருமணிகள் அருளாணை பிறப்பித்துள்ளாா்.

இதன்படி, தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் கலைநுட்பங்கள் வாய்ந்த பொருள்கள், அரிய புகைப்படங்கள், பல நாடுகளின் காசுகள் உள்ளிட்ட பழைமைவாய்ந்த பொருள்களை ஆதீன கல்லூரி நிலையங்களில் பயிலும் 10,000 மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், சேவை சங்கத்தினா், வரலாற்று ஆா்வலா்கள் ஆகியோா் சேகரித்து வழங்கலாம்.

அருங்காட்சியகத்தில் இடம்பெறும் வகையில் உள்ள புராதன பொருள்களைச் சேகரித்து வழங்குவோருக்கு அவற்றின் தன்மைக்கேற்ப தக்க சன்மானம் வழங்கப்படும். மிகுதியான பொருள்களைச் சேகரித்து வழங்குவோருக்கு ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் கரங்களால் சிறப்பு செய்யப்பெற்று சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.