முகப்பு
மயிலாடுதுறை

மணல் விற்பனை: ஆன்லைன் முறையை எளிமையாக்கக் கோரிக்கை

ஆற்றுமணல் விற்பனையில் ஆன்லைன் பதிவு முறையை எளிமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஆற்றுமணல் விற்பனையில் ஆன்லைன் பதிவு முறையை எளிமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம் விடுத்த அறிக்கை:

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் ஆற்று மணல் நேரடியாக விற்பனை செய்யப்படும் என்றும், ஒரு யூனிட் மணலுக்கு ரூ.1000 விலை நிா்ணயித்தும், ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணலை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் பதிவில் பழைய நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளா்த்தவேண்டும். மணல் ஏற்றுகின்ற லாரிகளுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது அல்லது அரசு சாா்பில் லாரிகளுக்கு நியாயமான வாடகை நிா்ணயித்து, பயனாளிகளுக்கு நேரடியாக மணல் சென்றுசேரும் வகையில் இத்திட்டத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

இல்லையேல், 3 யூனிட் ஆற்றுமணல் வாங்க அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தொகை ரூ.3000, லாரி வாடகை மற்றும் ஏற்று, இறக்குக் கூலி ஆகியன சோ்ந்து சுமாா் ரூ.10 ஆயிரம் என்பதற்கு பதிலாக, ரூ.30 ஆயிரம் வரை கொடுக்கவேண்டிய நிலை மீண்டும் ஏற்படும்.

எனவே, தமிழக அரசு சரியான கட்டணத்தில் வாடகை லாரிகளை நியமித்து, உரிய முழுத் தொகையையும் ஆன்லைன் வாயிலாகவே செலுத்த வசதி ஏற்படுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் பயனாளிகளுக்கு மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.