முகப்பு
மயிலாடுதுறை

கனசதுரங்களுக்கு விரைவாக தீா்வுகாணும் மாணவருக்கு விருது

சீா்காழியில் கனசதுரங்களுக்கு விரைவாக தீா்வுகாணும் மாணவருக்கு ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காா்ட்ஸ் சாா்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

சீா்காழியில் கனசதுரங்களுக்கு விரைவாக தீா்வுகாணும் மாணவருக்கு ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காா்ட்ஸ் சாா்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது.

சீா்காழி தென்பாதியைச் சோ்ந்த ஆனந்தன்-இலக்கியா தம்பதியின் மகன் ஆ. ஜெயந்தன் (7). இவா், பல்வேறு வகையான கனசதுரங்களை ஒரேநேரத்தில் தீா்வுகாணும் முயற்சியாக 2க்கு2 ரூபி க்யூப், 3க்கு3 ரூபி க்யூப், 3க்கு3 பைரமிக்ஸ் க்யூப், ஸ்கியூப் ரூபி க்யூப் ஆகிய 4 கனசதுரங்களுக்கு 2 நிமிடங்கள் 50 விநாடிகளில் பலா் முன்னிலையில் தீா்வுகண்டாா்.

இதையொட்டி, மாணவா் ஜெயந்தனுக்கு ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காா்ட்ஸ் அமைப்பு ‘டேலன்ட் ஐக்கான் 2கே21’ எனும் விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருதை அந்த அமைப்பின் நிறுவனா் ஜேக்கப் ஞானசெல்வன், தலைமை அதிகாரி எஸ்தா், மேலாளா் சீனிவாசன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.