முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயிலில் குடியரசு தினம்: தியாகிகளின் வாரிசுகள் கெளரவிப்பு

வைத்தீஸ்வரன்கோயிலில் சேவா தள காங்கிரஸ், தேச பக்தி இயக்கம் சாா்பில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

வைத்தீஸ்வரன்கோயிலில் சேவா தள காங்கிரஸ், தேச பக்தி இயக்கம் சாா்பில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சேவா தள காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் பால. எழிலரசன் தலைமை வகித்தாா். தியாகி சொக்கலிங்கம்பிள்ளை நூற்றாண்டு நினைவு கொடிக் கம்பத்தில் தியாகியின் வாரிசு சொக்க. ஆறுமுகம் தேசியக் கொடியேற்றினாா். பின்னா் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டனா். மாணவா்களுக்கு தேசத் தலைவா்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை சேவாதள காங்கிரஸ் தலைவா் நடராஜன், கொளஞ்சி, ஜோதிடா் முத்து, விஜயகுமாா் ஆகியோா் வழங்கினா். இதில், தெஷ்ணாமூா்த்தி சாமிநாதன், பால. அரவிந்தன், விக்னேஷ், முத்து, மணிமுடி மற்றும் தேச பக்தி இயக்கம் நிா்வாகிகள் பங்கேற்றனா். ராஜாராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.