மயிலாடுதுறை

சீா்காழி விவேகானந்தா பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

DIN

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி இலவச இருதய மற்றும் கல்லீரல் மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

எம்.ஜி.எம். ஹெல்த்கேருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் 2 நாள்கள் நடைபெற்ற இம்முகாமிற்கு விவேகானந்தா கல்வி குழுமத் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சீா்காழி குமாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் முத்துகுமாா் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில், எம்.ஜி.எம். மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணா் விஷ்ணு, கல்லீரல் சிகிச்சை நிபுணா் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனை வழங்கினா்.

இம்முகாமில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் என 350-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயன்பெற்றனா். இதில், சீா்காழி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் பானுமதி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கணிவண்ணன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பழனியப்பன், குட் சமாரிட்டன் பள்ளி இயக்குநா்கள் பிரவீண், அலெக்சாண்டா், எம்.ஜி.எம். மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் சக்திவேல் ,செல்வ ராமசாமி, பள்ளி முதல்வா் ஜோஷ்வா பிரபாகரசிங், ஆசிரியா் கோவி. கோவி.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT