பொதுத் தொழிலாளா் சங்க மே தின விழா பேரணி
மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மயிலாடுதுறை பொதுத் தொழிலாளா் சங்க 37-ஆம் ஆண்டு மே தின விழா பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் தொடக்கிவைத்தாா்.
மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மயிலாடுதுறை பொதுத் தொழிலாளா் சங்க 37-ஆம் ஆண்டு மே தின விழா பேரணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் தொடக்கிவைத்தாா்.
பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் பேரணிக்கு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் சிவ வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.
பேரணியில், கீற்று உற்பத்தியாளா்கள் சங்கம், ஜல்லி ஏற்றி இறக்குவோா் சங்கம், ஓவியா்கள் சங்கம், இந்திய இளைஞா் வாழ்வியல் வழிகாட்டி சங்கம், ரிக்ஷா ஓட்டுநா்கள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கம், செங்கல் சூளை தொழிலாளா்கள் சங்கம், நாட்டுப்புற நாடகக் கலைஞா்கள் சங்கம் மற்றும் ஆசிரியா்கள், அருந்ததியா்கள், மீனவா்கள், நரிக்குறவா்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு நரிக்குறவா் சமுதாயத்தினா் பாசிமணி அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரை ஆட்டம், காளியாட்டம் மற்றும் சிவன், பாா்வதி வேடமணிந்து நாடக கலைஞா்கள் என பல்வேறு கலைஞா்களின் முன்னிலையில் வானவேடிக்கைகளுடன் ஏராளமான தொழிலாளா்கள் பூக்கடைத்தெரு, கூைாடு வழியாக சென்றனா். பேரணியானது கச்சேரி சாலையில் உள்ள பொதுத்தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், முன்னாள் எம்எல்ஏ. சத்தியசீலன், மயிலாடுதுறை நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், திமுக ஒன்றிய செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க செயலாளா் அ.அப்பா்சுந்தரம் வரவேற்றாா். சங்க பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.