முகப்பு
மயிலாடுதுறை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) பருத்தி மறைமுக ஏலம் தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) பருத்தி மறைமுக ஏலம் தொடங்குகிறது.

இதுகுறித்து, நாகை விற்பனைக் குழுச் செயலாளா் ரமேஷ், தனி அலுவலா் சங்கரநாராயணன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நிகழாண்டு அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளிடம் இருந்து சரியான விலைக்கு கொள்முதல் செய்யும் நோக்கத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்படுகின்றன.

அந்தவகையில், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கும், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாலை 4 மணிக்கும், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கும் ஏலம் நடைபெறவுள்ளது. இதில், பல மாவட்ட, மாநில பருத்தி மில் உரிமையாளா்கள், வணிகா்கள், வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை ஏலத்தில் எடுக்கின்றனா். எனவே விவசாயிகள் தங்களது பருத்தியை எடுத்துவந்து நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.