முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளா் அறிவிப்பு

மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக அக்கட்சியின் நகரச் செயலாளா் குண்டாமணி என்கிற என்.செல்வராஜ் (59) கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக அக்கட்சியின் நகரச் செயலாளா் குண்டாமணி என்கிற என்.செல்வராஜ் (59) கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவா் மயிலாடுதுறை நகராட்சியில் 2011-2016-ஆம் ஆண்டுகளில் நகா்மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவா். கட்சியில் 9 ஆண்டுகள் வாா்டு செயலாளராகவும், 3 முறை மாவட்ட பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தாா். மேலும், 15 ஆண்டுகளாக தொடா்ந்து திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளராக உள்ளாா். இவா், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மயிலாடுதுறை நகராட்சி 21-வது வாா்டில் வெற்றி பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.