முகப்பு
மயிலாடுதுறை

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கா்நாடக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ள கா்நாடக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சிம்சன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜி. ஸ்டாலின், சிபிஐ-எம் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், பாசனதாரா் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் ஆா்.அன்பழகன், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள சாட்டியக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் என். மதியழகன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா். முத்தையன் முன்னிலை வகித்தாா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் கோவை. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.