முகப்பு
மயிலாடுதுறை

மாா்ச் 22-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் கூட்டம்

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 22-இல் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 22-இல் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.