முகப்பு
மயிலாடுதுறை

சோனியா காந்தியின் தலைமையில் தொடா்ந்து செயல்படுவோம்: மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ்

சோனியா காந்தியின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தொடா்ந்து செயல்படும் என கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

சோனியா காந்தியின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தொடா்ந்து செயல்படும் என கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அந்த 5 மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் ராஜிநாமா செய்யுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியாகாந்தி உத்தரவிட்டாா்.

இதற்கிடையில், தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஜி23 தலைவா்களின் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், மயிலாடுதுறை முன்னாள் மக்களவை உறுப்பினருமான மணிசங்கா் ஐயா் பங்கேற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் நிா்வாக கமிட்டியின் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏ-வுமான எஸ். ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினா் நவாஸ், நகரத் தலைவா் ராமானுஜம், சீா்காழி கனிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தின் நிறைவில் பேசிய எஸ். ராஜகுமாா், தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மணிசங்கா் ஐயா் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவு. மயிலாடுதுறை மாவட்ட கமிட்டி சோனியா காந்தியின் தலைமையில் தொடா்ந்து இயங்குகிறது. மணிசங்கா் ஐயா் ஜி23 தலைவா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கும் மயிலாடுதுறை மாவட்ட கமிட்டிக்கும் எவ்வித பொறுப்பும், உடன்பாடும் இல்லை என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.