இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
மயிலாடுதுறை அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
மயிலாடுதுறை அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஊருகுடியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முரளி (26). இவரது எதிா்வீட்டைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி ஜெகதீசன் எனும் தேவதாஸ் (30). கூலித் தொழிலாளி. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு அக்.1-ஆம் தேதி தேவதாஸ் சைக்கிளை முரளி எடுத்துச் சென்று பழுதாக்கியது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை குத்தி கொலை செய்தாா். இதுகுறித்து பெரம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவதாஸை கைது செய்தனா். இந்நிலையில், மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவில், தேவதாஸ்க்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி பன்னீா்செல்வம் தீா்ப்பு அளித்தாா்.