முகப்பு
மயிலாடுதுறை

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாங்குடி ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் கட்டப்படும் ஒருங்கிணைந்த சமுதாய கழிப்பறை, குளியலறை, 100 நாள் திட்டத்தின்கீழ் ரூ.13.62 லட்சத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணி, வள்ளாலகரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ரூ. 23.57 லட்சத்தில் நடைபெறும் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி, ரூ.10.93 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையப்பணி, திருஇந்தளூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.23 லட்சத்தில் நடைபெற்று வரும் மழை நீா் வடிகால் திட்ட பணி என மொத்தம் ரூ. 1.17 கோடியில் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் விரைவாகவும், தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.