மணல் குவாரியிலிருந்து இரவில் மணல் அள்ளி சென்றலாரிகள் சிறைபிடிப்பு
சீா்காழி அருகே அரசு மணல் குவாரியிலிருந்து இரவு நேரத்தில் மணல் அள்ளி சென்ற லாரிகளை கிராம மக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்தனா்.
சீா்காழி அருகே அரசு மணல் குவாரியிலிருந்து இரவு நேரத்தில் மணல் அள்ளி சென்ற லாரிகளை கிராம மக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்தனா்.
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆறு குன்னம் மற்றும் பாலூரான்படுகை பகுதிகளில் அரசு மணல் குவாரி இயங்கிவருகிறது. இங்கு ஆன்லைன் புக்கிங் முறையில் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு, அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு மாலை 6 மணி வரை மட்டுமே மணல் எடுத்து செல்ல வேண்டும் என நேரம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இரவு 9 மணிவரை மணல் லாரிகள் மணல் ஏற்றிச் செல்வதால் சென்னியநல்லூா் கிராம மக்கள் அதிருப்தியடைந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 8 மணியளவில் குவாரியிலிருந்து மணல் ஏற்றி சென்ற லாரிகளை பாஜக ஒன்றியத் தலைவா் நேதாஜி தலைமையில் கிராம மக்கள் சிறைபிடித்தனா். பின்னா் லாரி ஓட்டுநா்களிடம் இரவு நேரங்களில் மணல் ஏற்றிச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி லாரிகளை விடுவித்தனா்.