முகப்பு
மயிலாடுதுறை

மேட்டூா் அணை திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது மற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது மற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாசனத்திற்காக மே 24 முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் பங்கீட்டில் நீா்வள ஆதாரத்துறை அலுவலா்களுடன் ஒத்துழைத்து பயன் பெறவேண்டும். நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறைவைத்து தண்ணீா் விடப்படும்.

காவிரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீா் திறந்துவிடும்போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சலடிக்கவோ, மீன்பிடிக்கவோ மற்ற பொழுதுபோக்குகளிலோ ஈடுபட வேண்டாம். ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று சுயபடம் எடுக்க வேண்டாம்.

குழந்தைகள் யாரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீா்நிலைகளில் இறங்கி விடாமல் பெற்றோா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கால்நடைகள் நீா்நிலைகளில் கடந்து செல்லும்போது விவசாயிகள் கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.