ஹந்தி திணிப்பு எதிா்ப்பு விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
மயிலாடுதுறையில் ஹந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மான விளக்க துண்டுப் பிரசுரங்களை திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விநியோகித்தாா்.
மயிலாடுதுறையில் ஹந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மான விளக்க துண்டுப் பிரசுரங்களை திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விநியோகித்தாா்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மக்களிடையே ஒரு மொழியை திணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதை வலியுறுத்தியும், ஹந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மானத்தை விளக்கியும் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறையில் திமுகவினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தனா். கட்சி அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ பங்கேற்று, பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் என அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
இதில், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் குமாரசாமி, திமுக நகர துணைச் செயலாளா் ஆா்.கே. சங்கா், நகராட்சி உறுப்பினா் சா்வோதயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.