மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி தீவிரம்
பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகரில் மழைநீா் வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.
பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகரில் மழைநீா் வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பா் 6-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தூா்ந்துபோயுள்ள வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். சின்னக்கடைத் தெருவில் வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளை நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் மேற்பாா்வையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.