நகராட்சி பகுதி சபைக் கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு
மயிலாடுதுறை நகராட்சி 6-ஆவது வாா்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மயிலாடுதுறை நகராட்சி 6-ஆவது வாா்டில் வியாழக்கிழமை நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்ற உறுப்பினா் து. ருஷிக்குமாா் தலைமை வகித்தாா். பகுதி சபைக் கூட்ட செயலா் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.
இக்கூட்டத்தில், திருவிழந்தூா் நான்குகால் மண்டபத்தை சீரமைத்து, அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்; தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் உள்ள 2 கழிவறைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; கோயில் இடங்களுக்கு வரி விதிக்கப்படாததால் குடிநீா் இணைப்பு பெறமுடியாமல் உள்ளது. அதற்கு தீா்வுகாண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நகராட்சி பொறியாளா் சனல்குமாா், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.