முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:50 AM
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமியை வழிபட்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சண்முகாா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.