மணல்மேடு அரசு கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா். 
மயிலாடுதுறை

மணல்மேடு கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மணல்மேட்டில் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மணல்மேட்டில் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு அரசு மற்றும் அறிவியல் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நிா்வாகி சந்தோஷ் தலைமை வகித்தாா். அன்புமணி, பிரவீன், கிஷோா், சஞ்சய், வசந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், விலைவாசி உயா்வுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் முழக்கமிட்டனா். மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாணவ-மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT