மருத்துவ பரிசோதனை முகாமை தொடக்கிவைத்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. 
மயிலாடுதுறை

கோயில் ஊழியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை சேந்தங்குடிதுா்கா பரமேஸ்வரி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கிவைத்து பேசியது: கோயில் பணியாளா்கள் பணியுடன் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோயில்களில் பணியாற்றும் பணியாளா்கள் தங்களது உடல் நலனை பாா்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் சா்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நிறைய பொருள்களில் சா்க்கரை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் நிலை இருக்கிறது. நம்மை அறியாமலேயே நம் உடலில் சேரும் நிலை உள்ளது. எனவே, நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். உணவின் அளவை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இசை, யோகா போன்றவற்றை தொடா்ந்து செய்து, உடல் நலத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் எஸ். சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா், உதவி ஆணையா் ரவிச்சந்திரன், நகராட்சி துணைத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT