மயிலாடுதுறை

சீா்காழி டாஸ்மாக் கடை வளாகத்தைப் பூட்டி போராட்டம்

சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

சீா்காழி: சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக தொடா்ந்து புகாா் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மது க் குடிப்போா் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவாயில் வளாக கதவை பூட்டி முற்றுகையிட்டனா்.

சம்பந்தப்பட் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.

சீா்காழி போலீஸாா் கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT