மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

Din

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 25-ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக, அரசு உத்தரவுப்படி, அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டது. இச்சிலைக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ந. உமாமகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT