முகப்பு
மயிலாடுதுறை

கரோனா காலத்திலான நகராட்சி கடைகளின் வாடகைகளை தள்ளுபடி செய்ய கோரி மனு

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:56 am IST
பகிர்:

சீா்காழியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் கரோனா காலத்தில் செலுத்த வேண்டிய 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சொந்தமான 100-க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்காததால் வியாபாரம் இல்லாமல் வாடகை செலுத்திமுடியவில்லை. இந்நிலையில், பழைய பேருந்து நிலைய வா்த்தக சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில், செயலாளா் சந்துரு, பொருளாளா் நடராஜன், துணை செயலாளா் பாஸ்கரன், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் கரோனா காலத்தில் வாடகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஊா்வலமாக சீா்காழி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா், நகராட்சி ஆணையா் (பொ) சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனா். நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு கரோனா கால வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற தீா்ப்பின்படி 6 மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டதை போல மற்ற நகராட்சியில் வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.