முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:59 am IST
பகிர்:

விசிக பிரமுகா்கள் மீது வெடிகுண்டு வீசி நடைபெற்ற கொலை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை, புதுக்கோட்டை மண்டல செயலாளா் சதா. சிவக்குமாா், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளா் இளமதி அசோகன் ஆகியோா் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்த்தென்றல், பொன்னுதுரை, வீர. பெருவழுதி, குமாரவேல், தீரன்சிங் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மண்டல முன்னாள் செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், அன்புச்செல்வன், அன்பழகன், கனிவளவன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.