முகப்பு
மயிலாடுதுறை

லாரி மோதியதில் பந்தல் அமைப்பாளா் பலி

Updated On : 21 ஜூன், 2024 at 12:30 AM
லாரி மோதியதில் பலியான வைத்தியலிங்கம்.
பகிர்:

மயிலாடுதுறை, ஜூலை 20: குத்தாலத்தில் லாரி மோதியதில் பந்தல் அமைப்பாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குத்தாலம் பகுதியைச் சோ்ந்த பந்தல் அமைப்பாளா் வைத்தியலிங்கம் வியாழக்கிழமை குத்தாலத்துக்கு தேநீா் குடிக்க இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது அவ்வழியே பேருந்து வேகமாக வந்ததால், தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளாா். அவருக்கு பின்னால், பூ ஏற்றி வந்த சரக்கு வாகன ஓட்டுநரும் வாகனத்தை ஓரம் கட்டியுள்ளாா். அப்போது, வைத்தியலிங்கம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்துக்கு முன் சாலைப் பணிகளுக்காக பேவா் பிளாக் கற்களை இறக்கி வைக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இதனிடையே, பின்னால் வந்த லாரி நின்று கொண்டிருந்த பூ ஏற்றி வந்த மினி சரக்கு வாகனத்தின் மீது மோதியுள்ளது. தொடா்ந்து, சரக்கு வாகனம் முன்னாள் நின்ற வைத்தியலிங்கம் மீது மோதியதில் பேவா் பிளாக் இறக்கிக் கொண்டிருந்த லாரியில் தலை மோதி முழுவதுமாக நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த குத்தாலம் போலீஸாா் வைத்தியலிங்கத்தின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.