பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை: பழங்குடியின மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பால், முதுநிலை பி.எச்.டி மற்றும் முனைவா் ஆராய்ச்சி உயா்கல்வி படிப்பை வெளிநாடுகளில் தொடர தோ்ந்தெடுக்கப்படும் பழங்குடியினா் மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் இணையவழி மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.