முகப்பு
மயிலாடுதுறை

பாமக, வன்னியா் சங்கம் கண்டன ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:07 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க. அய்யாசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் தாக்கப்பட்ட பா.ம.க. இளைஞா் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழிக்கு மிரட்டல் விடுத்து பொதுமேடையில் பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க. அய்யாசாமி தலைமை வகித்தாா். பாமக தஞ்சை மண்டல செயலாளா் ஐயப்பன், மாவட்ட தலைவா் பழனிச்சாமி, வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் பாக்கம் சக்திவேல், பாமக மாநில மகளிா் சங்க செயலாளா் தேவி குருசெந்தில், மாவட்ட இளைஞரணி தலைவா் விமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை டிஎஸ்பி திருப்பதி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.