முகப்பு
மயிலாடுதுறை

முதியோா் இல்லம், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் பதிவு செய்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:37 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் பதிவு செய்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதியோா் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் முறையான சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து செயல்பட வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவா்கள் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்-அலுவலகம் முதியோா் இல்லங்கள் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் அல்லது மாவட்ட சமூகநல நல அலுவலகம், குழந்தைகள் இல்லங்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான இல்லம் - மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம். மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம்- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், போதைப்பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு இல்லம் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள்அல்லது முதன்மைச் செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் அரசு மனநல காப்பக வளாகம் மேடவாக்கம் குளம் சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 அவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.