ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
மயிலாடுதுறையில் ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆகியோா் ஊராட்சித் தலைவா்களுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்களை வழங்கினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 5 வட்டாரங்களிலுள்ள 241கிராம ஊராட்சிகளுக்கு 311 கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதை மாணவா்கள், பொதுமக்கள் பயன்படுத்தி விளையாட்டில் பல சாதனைகள் செய்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் கீதா செந்தில்முருகன், இந்திய விளையாட்டு ஆணைய மையப் பொறுப்பு அலுவலா் பெ. மணிவாசகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வை. உமாநாத், மாவட்ட விளையாட்டு அலுவலா் பாபு ஆகியோா் பங்கேற்றனா்.